"கிடப்பில் கிடக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் : துரிதகதியில் சேலம் - சென்னை புதிய சாலை அமைக்கும் திட்டம்"

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் கூட நாட்டாத நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் சேலம் - சென்னை இடையிலான சாலை அமைக்கும் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழாவில் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். 

மேலும், ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. உடனடியாக அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதேபோல, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கூட நாட்டப்படாமல் இருக்கும் நிலையில், சேலம் – சென்னை இடையே புதிய சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இத்திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். 

புதிய சாலை அமைக்கும் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி குறைகளை கலைய வேண்டும். காவிரி விவகாரத்தில் போராடியவர்கள், தற்போது காவிரி நீரை கடலில் கலக்காமல் சேகரிப்பதற்கு தேவையான திட்டங்கள் கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு அதனை உணர்ந்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...